திருமருகல்
சடயாயெனுமால் சரண்நீயெனுமால்
விடயாயெனுமால் வெருவாவிழுமால்
மடயார்குவளை மலரும் மருகல்
உடயாய்தகுமோ இவள் உள்மெலிவே
சிந்தாஎனுமால் சிவனேஎனுமால்
முந்தாஎனுமால் முதல்வாஎனுமால்
கொந்தார்குவளை குலவும் மருகல்
எந்தாய் தகுமோ இவள் ஏசறவே
=திருஞானசம்பந்தர் தேவாரம்
செட்டிப்பெண் ஒருத்தி தன மாமன் மகனயே திருமணம் செய்வேன் என்று கூறி வீட்டைவிட்டு வெளியேறி மருகல்எனும் பதியில் இருக்கும்
மாணிக்கவண்ணர் சந்நிதியில் மாமன் மகனயே திருமணம் செய்யவிருந்த நேரத்தில் மனமகன் அரவம் தீண்டி இறநது போக ஆதவற்ற நிலயில் அலறிபுரண்டு அழுகொண்டிருந்த செட்டிப்பெண்ணின் துயர்தீக்கும்பொருட்டு மாண்டுபோன முறைமாமன சம்பந்தர் பாடிஎழுப்பிய பதிகமே இந்த மருகல் திருப்பதிகம்.
பாடிய இத்திருத்தலம் = திருமருகல்
மருகல் என்றால் = கல்வாழை என்று பொருள்
கல்வாழைதான் இங்குதலவிருட்சம்
இறைவன் இரத்தினகிரிஸ்வரர் என்ற மாணிக்கவண்ணர்
பெயருக்கேற்றவண்ணம் அவரது மேனி அழகு
இறைவி வண்டுவாழ்குழலி
தலதீர்த்தம் இலக்குமி தீர்த்தம்
மாடக்கோவில் வகையைச்சேந்த மண்டபம்
வன்னிமரமேடயில் செட்டிப்பெண்திருமணம்நடந்த இடம்
கோவில் தேரடி அருகே உள்ள குமாரசாமி திருக்கோயில்.
இத்தலம் நாகப்பட்டினம் = நன்னிலம் பேருநது மார்க்கத்தில்
நாகயிலிருநது சுமார் 15 கிமி தூரத்தில் அமைந்துள்ளது.
அருகில் சிறுதொண்டர் வாழ்ந்த திருச்செங்காட்டாங்குடியும்
அப்பர் முக்திஅடந்த திருப்புகலூர் திருத்தலங்களும் அமந்ள்ளன