Wednesday, January 14, 2009

திருவடியோகம் - பகுதி 1


  

சித்தாகள் தங்களின் வாழ்வின் முக்கிய யோகநெறியாக தியானம் என்ற தவநெறியை தவறாமல் கடைபிடித்து தங்களின் அறிவை பேரறிவாக மாற்றி, மனதை வளப்படுத்தி, இறைநிலை உணர்ந்த மாந்தராகி, மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்ந்து தங்களின் தவஆற்றலை வெளிப்படுத்திளயுள்ளனர். மூலாதாரத்திலிருந்து மூண்டு எழும் குண்டலினி என்னும் சக்தியை தமது தலை உச்சியில் உள்ள சகஸ்ரார சக்கரத்தை அடையும் நிலையே துரியம் என்னும் அற்புத தவமாகும். சக்தி சக்கரத்தில் ஏழாவது நிலையான சகஸ்ராரம் ஆயிரம் இதழ்களைக் கொண்டது (சரியாக 972 இதழ்கள்), இங்கு உயிரின் மீது மனதை வைத்து தவம் இயற்றும்போது எல்லையில்லாத ஆனந்தம் பெருகி பரமாத்வோடு சீவாத்மா ஒன்றி 
இறைநிலையின் திருவடியை அடைகிறது, ஆகவேஇறைநிலை உணர்ந்த இந்தயோகம் 
திருவடியோகம் என்று உணரப்படுகிறது, அனைத்து நாளமில்லாச்சுரப்பிகளும் சகஸ்ரா சக்கரத்தின் ஆளுமையின்கீழ் வருவதால் 
உடலில் உள்ள அனைத்து இயக்கங்களையும் 
ஏழாவது சக்திகளமான சகஸ்ரார சக்கரமே 
ஆளுகிறது. எனவே இங்கு இயற்றப்படும் துரிய தவத்தின் சிறப்பினை சொல்லிமாளாது.   

முதல் ஆறு சக்கரங்களையும் யோகம் தியானம் பக்தி மந்திரங்கள் மூலமாக தூண்டிவிட, அச்சக்கரங்களுடன் தொடர்புடைய உறுப்புகளை வலுவாக்கிட முடியும். ஆயினும் சகஸ்ரார யோகம் மட்டும் குருவின் மூலமாக திருவடி தீட்சைப் பெற்றப் பிறகே தவமியற்றடமுடியும்.

திருமூலா முதலான சித்தாகளும் யோகிகளும் இத்துரிய தவச்சிறப்பினை தங்களின் அனுபவங்களாக விவரித்துள்ள்னா
திருமூலர்

"நந்தி திருஅடி நான் தலைமேற்கொண்டு
புந்தியின் உள்ளே புகப்பெய்து, போற்றிசெய்து
அந்தி மதிபுனை அரனடி நாள்தோறும்
சிந்தை செய்து ஆகமம் செப்பலுற்றேனே"

என்குருநாதனான நந்தியின் இரு திருவடிகளையும் என் தலைமேற்கொண்டு, அறிவில் நிறுத்தி வணங்கி தலைஉச்சியில் மதிசூடிய சிவனின் திருவடிகளை நாள்தோறும் நினைந்து, தவமியற்றி திருமந்திரம் என்ற இந்நூலை தொடங்குகின்றேன் என்று தமது குருவான நந்தியின் மூலம் திருவடி தீட்சை பெற்று ஆகமம் தொடங்கியதாக கூறுகின்றார். மேலும்,

"தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பாகள்
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவாகள்
சென்னியில் வைத்த சிவன் அருளாளே" (திருமந்திரம் 2611)


இங்கு திருமூலர், சென்னியில் வைத்த சிவன் அருள் என்று குறிப்பிடுவது உச்சந்தலையில் இருக்கும் சகஸ்ரார யோக நிலையாகும். இச்சக்கர யோகம்மூலம் இறைநிலை உணர்ந்த ஞானிகள் வந்த வினைகளையும் வரும் வினைகளையும் அறுத்து இறைவனின் திருவடிசேர்வார்கள் என்று திருமூலர் உரைக்கிறார்.

சிவவாக்கியா
"உருதரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக் 
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லீரேல் 

விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும்
அருளதரும் நாதர் பாதம் அம்மைபாதம் உண்மையே"



சிவவாக்கியர் தமது பாடலில் மூலாதாரத்தில் ஒடுங்குகின்ற குண்டலினி சக்தியை தலை உசசியில் எழுப்பி துரிய நிலையில் தவம் இயற்றும்போது என்றும் இளமையுடன் இருக்கும் மரணமில்லாப் ப‍ெருவாழ்வு கிடைக்கும் மேனியும் சிவந்து சிவவடிவமாகும் இது உண்மை என்று தமது அனுபவங்களை எடுத்துரைக்கிறார். இதனையே திருவள்ளுவரும் தவம் என்ற அதிகாரத்தில்
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்ற்ல் தலைபட்டவர்க்கு

தவமியற்றுவோருக்கு எமனின் பிடியிலிருந்து தப்பும் கலையான மரணமில்லாப்பெருவாழ்வ கிட்டும் என்று உரைக்கிறார்
   
அழுகுணி சித்தர்

  காட்டானை மேலேறிக் கடைத்தெருவே போகையி‍லே
  நாட்டார் நமைமறித்து நகைப் புரிய பார்ப்தென்றோ 
  நாட்டார் நமைறித்து நகைப்புரிய பார்த்தாலும்
  காட்டானை மேலேறி என் கண்ணம்மா கண்குளிரங்
  காண்பேனோ





காட்டானையாக உள்ள அறிவு நாட்டாராக உள்ள ஐம்புலன்களையும் கடந்து, அறிவு விழிப்போடு புலனன்பங்களைக் கடந்து இறைநிலையோடு ஒன்றி இன்பம் கானும் துரியநிலையைதான் எப்போது கண்குளிரகாண்பேனோ? என்று அழுகுனி சித்தர் துரிய நிலை தவத்தின் பெருமைகளை உரைக்கின்றார

அருட்தந்தை வேதாத்திரி மகரிசி அவாகள் இத்தவத்தினை உச்சிக்குள் அமர்ந்த உயர்வாழ்வு என்றுரைக்கின்றார்

  உச்சியிலே நீ சென்றால உடனே கானும் 
  ஒரு அதிசியம் வலமாம் சுற்று ஆகும்
  அச்சமயம் அறிவிற்கோர் வியப்பு கானும்
  அவவிடத்தே நிலைத்திருக்கப் பழகிவிட்டால்
  இச்சை‍யெல்லாம் பிறக்குமிடம் கண்டுகொள்வாய்
  எதுவேண்டும் வேண்டாம் என்று இரண்டுங்கண்டு
  நச்சுவினை இச்சையெலாம் அழித்துவிட்டு
  நலம் ஈயும் எண்ணமே மீதங்கொள்வாய்

                          -ஞானகளஞ்சியம் வேதாத்திரி மகரிசி

தலைஉச்சியில் உணர்வை நிறுத்தி துரியதவம் என்ற இந்த பிரம்மந்திர தவத்தை மேற்கொள்ளும்போது உயிர்சசக்தி சுழன்று மூளையின் ஒவ்வொரு செல்லிலும் ஊடுறுவுகின்றது. ஆகையினால் நினைவாற்றல் அதிகரித்து மனஅலைச்சூழல் ஆல்பா அலையில்
வினாடிக்கு 8 - 13 என்ற அளவில் ஒடுங்குகின்றது. அதனால் பிறவித்தொடராக வந்த கர்ம வினைகள் களையப்பட்டு ஆன்மா தூய்மை பெறுகிறது.

இத்தவத்தில் அறிவு உயிரில் அடங்கி பிரம்மமத்தையே நோக்கி சென்று தானே பிரம்மம் என்று உணர்வதால் இத்தவம் "பிரம்மந்திரயோகம் "என்றும் அழைக்கப்படுகிறது, இதனையே இரமணரும்
அறிவேதான் நான என்றும்
தாயுமானவரும
அறிவேதான் தெய்வம் என்றும் கூறுகின்றார். திருமூலரும் அறிவே தெய்வம் என்பதனை

  எல்லாம் அறிந்த அறிவினை நானெனில்
  எல்லாம் அறிந்த இறையெனலாமே


துரிய யோகத்தில் உடல் இயக்கங்கள் அனைத்தையும் இயக்கும் ஆளுமை கொண்டிருப்பதால் மூளையின் செய்ல்பாடுகளும் அதிலிருந்து தோன்றும் எண்ணங்களும் சிந்தனைகளும் இந்த ஏழாவது சக்கரமான சகஸ்ரார யோக நிலையினாலேயே கட்டுப்படுத்தப்படுகிறது. இச்சக்கரம் வழியாக வாழ்வினை துவக்கி இறக்கும்போது இதன் வழியாகவே உயிர்பிரிகின்றது இதனை கபால மோட்சம் என்று கூறுவா