Thursday, October 25, 2007

வினோத சிவலிங்கங்கள்




வினோத சிவலிங்கங்களும் சிவாலயங்களும்

1001 சிறுலிங்கங்கள் கொண்ட சகஸ்ர லிங்கம் இராமநாதபுரம் மாவட்டம் ஆதிசிதம்பரம் என்று அழைக்கப்படும் திருஉத்ரகோசமங்கையில் உள்ளது.

திருவாடானை அருகில் திருவெற்றியூர் அருள்மிகு வண்மீகநாதர் பாகம்பிரியாள் ஆலயத்தில் இருக்கும் லிங்கத்தில் சக்தியின் வடிவமும் சேர்ந்து இருப்பதால் அன்னை பாகம்பிரியாள் என்று அழைக்கப்பட்டாள். இங்கு அம்மன் சுவாமி இருவருக்கும் இரு அர்ச்சனைகள் சேர்ந்தே செய்கிwர்கள்.

குடந்தை பட்டீஸ்வரம் அருகில் இருக்கும் திருசக்திமுற்றம் என்றஸ்தலத்து இறைவன் அருள்மிகு சக்திவனேஸ்வரரை அன்னை பெரியநாயகி தழுவிய கோலத்தில் இருப்பதால் இறைவர் தவழக்குழைந்த நாதர் (சக்தி தழுவிய நாதர்) என்று அழைக்கப்படுகிறhர்.

தஞ்சை பாபநாசம் அருகில் இருக்கும் திருநல்லுhர் ஈசன் தினமும் ஐந்துமுறை நிறம் மாறுவதால் பஞ்சவர்ணேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறhர். இத்தலத்து இறைவன் திருநாவுக்கரசருக்கு தன் திருவடிசுl;டியதால் இங்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் சிவன் திருவடி பதித்த சடாhp சு{ட்டப்படுகிறது.

மயிலாடுதுறை அருகில் இருக்கும் திருநீடுர் தலத்து இறைவன் சோமநாதரை நண்டு வனங்கியதால் லிங்கம் நண்டு வளையுடன் காணப்படுகிறது.

நாகை மாவட்டம் திருப்புன்கூர் மற்றும் ஆவுடையார்கோவில் (திருப்பெருந்துறை) தலங்களில் லிங்கத்திற்கு பதிலாக செப்புக்குவளை கவசமாக சாற்றப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புனவாசல் என்ற தலத்து லிங்கத்தைவிட ஆவுடையார் bghpயது. ஆகவே லிங்கத்திற்கு 3 முழம் வேட்டியும் ஆவுடையாருக்கு 30 முழம் வேட்டியும் சுற்றப்படுகிறது, _ன்று முகமும் ஒரு சுற்று முப்பது முழமும் ஒரு சுற்று என்பது அந்த பகுதியில் வழக்கு மொழியாக அழைக்கப்படுகிறது.

திருக்கருகாவூர் அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை சமேத முல்லைவன நாதர் ஆலயத்து _லவர் சுயம்புதிருமேனி மீது முல்லைக்கொடிபடர்ந்து இருந்ததாக வரலாறு. இன்றும் முல்லையின் வடுஉள்ளதால் இறைவன் முல்லைவனநாதர் என்று அழைக்கப்படுகிறhர்.

குடந்தை - காரைக்கால் மார்க்கத்தில் இருக்கும் திருநீலக்குடி _லவர் அருள்மிகு நீலகண்டேஸ்வரருக்கு எண்ணெய் அபிசேகம் சிறப்பு. எவ்வளவு எண்ணெய் அபிசேகம் செய்தாலும் பாணத்திற்குள்ளே இழுத்துக்கொள்ளும். இங்கு அம்பாளே ஈசனுக்கு அபிசேகம் செய்வதாக வரலாறு.

திருக்காணப்பேர் என்றழைக்கப்படும் காளையார்கோவில் _லவருக்க _ன்று சந்நிதிகள். காளீஸ்வரர், சோமேசர் மற்றும் சொக்கேசர் ஆகியவையாகும்.

காஞ்சிபுரம் அருள்மிகு திருமேற்றளிநாதர் ஆலயத்தில் இரு சந்நிதிகள் ஒன்று ஓதகிhPஸ்வரர் மற்றெhன்று திருமேற்றளிஈசர்.

காஞ்சி - பெருங்காட்டுர் அருகில் இருக்கும் திருப்பனங்காட்டுர் தலத்தில் பனங்காட்டீஸ்வரர் மற்றும் கிருபாநாதேஸ்வரர் என்ற இரண்டு சுவாமி சந்நிதிகளும் அமுதவள்ளி - கிருபாநாயகி என்ற இரண்டு அம்;மன் சந்நிதிகளும் உள்ளன.

காற்று தலமான திருக்காளத்தி அருள்மிகு காளத்தீஸ்வரர் சந்நிதியில் எhpயும் தீபம் காற்றினால் மோதப்பட்டது போல் எக்காலமும் அசைந்து கொண்டிருக்கும்.

சிவசர்மன் என்ற பாலபக்தனின் பூiIக்காகவேண்டி ஈசன்தனது திருமுடிவளைத்து ஏற்றுக்கொண்டதால் திருவிருஞ்சிபுரத்து இறைவன் அருள்மிகு மார்கபந்தீஸ்வரர் திருமேனி சற்று வளைந்து காணப்படுகிறது.

திருப்பாம்புரம் அருள்மிகு வண்டுசேர்குழலி சமேத பாம்புரநாதர் திருமேனியில் ஞாயிறு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நாக பாம்புகள் நாகவழிபாட்டை மேற்கொள்வதாகவும் அந்த நேரத்தில் மல்லிகை தாழம்பூ நறுமனம் வீசுவதாக செவிவழி செய்திகள் கூறப்பட்டாலும் கடந்த 2002ம் ஆண்டு மார்ச் மாதம் 21ம் நாள் இறைவன் திருமேனிமீது பாம்பு தனது சட்டையை அணிவித்துஇருப்பதை பலர் கண்டுள்ளனர்.

மயிலாடுதுறை அருகில் திருவாளப்புத்துhர் என்ற தலத்தில் திருமால் மாணிக்க லிங்கத்தை ஸதாபித்து வழிபட்டதால் இத்தலத்து இறைவன் மாணிக்கவணேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறhர்.

திருவாடானை தலத்தில் சு{hpயன் நீலஇரத்தின லிங்கத்தை ஸதாபித்து வழிபட்டதால் ஆதிரத்திணேஸ்வரர் ஆனார்.

திருவடிச்சுலம் _லவர் இடைச்சுரநாதர் மரகத (பச்சைக்கல்) லிங்கத்திலானவர்.


No comments: